கிழக்கில் அதிகரிக்கும் டெங்கு - 22 வயது கர்ப்பிணிப் பெண் பரிதாப மரணம்!

திருகோணமலை, மாவட்டத்தில் டெங்கின் தக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் கிண்ணியா-3, மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணித் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான 8 மாத கர்ப்பிணித் பெண்ணே இவ்வாறு டெங்கினால் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றில் இருந்த சிசு இறந்ததை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த குறித்த பெண் மேலதிக சிகிற்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் உயிரிழத்தாகவும் கூறப்படுகின்றது.

இறந்த பெண் மற்றும் 8 மாத சிசுவின் நல்லடக்கம் இன்று கிண்ணியாவில் இடம்பெற்ற நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.