காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவே விசாரணை-ஜெயவனிதா

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவே, தன்னை இரண்டாம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்திருந்ததாக , காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் வவுனியா மாவட்டச் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாக, 1,060 நாள்களாகத் தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.