விளையாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, செங்கலடி-இலுப்படிச்சேனை பிரதேசத்தினை சேர்ந்த விமலநாயகம் லூபேசாந் (வயது 15) எனும் சிறுவன் விளையாடிக்கொண்டு இருக்கும் வேளையில் திடீர் என்று மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

விளையாடி விட்டு களைப்புடன் காணப்பட்ட சிறுவன் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவனின் மரணம் அப் பிரதேச மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.