தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள லீசிங் நிறுவனம்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தவணை கொ டுப்பனவு முறையில் குளிரூட்டி (ஏசி) வாங்கிய வைத்தியசாலை நிர்வாகம் கடந்த பல மாதங்களாக கொடுப்பனவை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குளிரூட்டிகளை வழங்கிய நிறுவனம் அவற்றினை மீள ஒப்படைக்குமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கூறியுள்ளது.

தெல்லிப்பளை வைத்தியசாலையின் ஓரு பகுதிக்கு அண்மையில் பொருத்திய குளிரூட்டிகளிற்கான கொடுப்பனவு தொடர்பிலேயே மேற்படி சர்ச்சை நிலவுகின்றது.

அத்துடன் தமக்கான கொடுப்பனவை செலுத்த தவறும் பட்சத்தில் குளிரூட்டிகளை மீள வழங்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது நிர்வாக ரீதியிலான கொள்வனவுகள் அல்ல என்றும், இருப்பினும் வளாகத்தில் பொருத்தினால் அவை அரச சொத்தாகவே கருதப்படும் என்பதுடன் இதனை அகற்றுவதானால் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.