யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ள இயந்திரம்..! வட பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக MRI (Magnetic Resonance Imaging) எம்.ஆா்.ஐ ஸ்ஹனா் இயந்திரம் இல்லாமையினால் நோயாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டனர்.

அத்துடன் வடமாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் அந்த இயந்திரம் இல்லாத நிலமையும் காணப்ப ட்டதனால் நோயாளா்கள் அனுராதபுரம் சென்று தமது தேவைகளை நிவா்த்தி செய்யவேண்டியிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு புதிய முதல்தர ( Siemens) சிமென்ஸ் கம்பனியின் MRI இயந்திரம் கிடைத்துள்ளது.

இது நவீன (3T Siemens Magnetom Verio) என்னும் பலம்வாய்ந்த MRI இயந்திரமாகும்.

அத்துடன் கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்குவது குறித்தான பரிட்சார்த்த செயற்பாடு இடம்பெறுகிறது.

கடந்த ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சரவைக்கு முன்வைத்ததன் படி இதற்கென 1.65 மில்லியன் அமெரிக்க டொலரில் டிமோ தனியார் நிறுவனத்தில் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த MRI இயந்திரம் கிடைத்துள்ளது.

இந்த இயந்திரத்தை இரண்டு வருடங்களின் பின்னர் 5 வருடத்திற்கு பராமரிக்க 2,96,231 அமெரிக்க டொலர்களுக்கு சேவை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்துக்கான உடன்படிக்கையை இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதியளித்தது.

இந் நிலையில் இன்னும் சில வாரங்களில் நோயாளர்கள் எந்த சிரமுமின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் MRI Scan செய்துகொள்ளமுடியும்.

இதேவேளை வடபகுதி மக்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆா்.ஐ ஸ்ஹனா் வந்துள்ளமை ஒரு வரபிரசாதமாகவே அமைந்துள்ளது.