மீண்டும் கொழும்பிற்கு வந்த ஆபத்து!

கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு இன்று முற்பகல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இத்தகவலை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கண்டி நகரின் தூசு துகள்களின் செறிவுச் சுட்டி முற்பகல் 08.30 மணிக்கு 156 ஆக பதிவாகியுள்ளதுடன், பத்தரமுல்லை நகரில் 151ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச் சுட்டி தற்போது 129 ஆக பதிவாகியுள்ளதாகவும் அந்த நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.