அம்மியில் அரைப்பதால் மனிதநேயனாகிவிட்டாரா சங்கக்காரா?

அணமையில் இடம்பெற்ற கம்பன்கழக விழாவில் இலங்கையின் பிரபல கிரிகெட் வீரரான குமார் சங்கக்கார கௌரவிக்கபட்டிருந்தார். இந்நிலையில் அவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர் அம்மியில் சம்பல் அரைக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குமார் சங்கக்கரா தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன செய்துவிட்டாரென்று கம்பன் விருது கொடுத்தார்களோ தெரியாது? என கேள்வி எழுப்பியுள்ள சிலர் , இப்போது அம்மியில் அரைப்பதால் மனிதநேயனாகிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

2009 க்குப் பின் தமிழினம் எத்தனேயோ அழிவுகளையும் இழப்பையும் சந்தித்திருக்கிறது ஒரு முறையேனும் வடகிழக்குப்பக்கம் அவர் எட்டிப்பார்த்த ஞாபககூட இல்லை.

தாய் வழி தமிழ் என்கிறார் ஆனால் தமிழ் பேசுவரோ என்பது தெரியாது ..

இவரை விட ஊடகவியலாளரும் மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவருமான விக்கிரமபாகு கருணாரெட்ண தகுதியானவர் ....கம்பன் விருதுக்கு ..

சிறந்த தொழில் சார் விருது, திறமைக்கான விருது என்றால் இவருக்கு பொருந்தும்....ஏன் பண்பாளன் கூடத்தான்...மற்றப்படி

இப்போது அம்மியில் அரைத்து சாப்பிடுகிறார் நிச்சயம் மனிதநேயனாகத்தான் இருப்பார் என்கிறார்கள் அவரின், சொத்துவிபரமும், சொகுசு கார்களின் விபரமும் அறியாதோர்,

பிக்கினிக் ஒன்றில் அம்மியில் அரைக்கிறார் இது எளிமையா?

குறை சொல்லவில்லை நாம் ஏமாளிகளாக இருப்பதற்கு இதுபோன்ற சில சிந்தனைகளும் காரணம் ...

காமராசர், குடிசை வீட்டிலே இருந்தார் ...வாடகை கார் தானே சமைத்தும் உண்டார் அவர் எளிமையானவர்தான் ..

கம்பன் கழகம் அடையாளம் காட்டிய முத்துக்கள்தான் .. விக்கினேஸ்வரனும் சுமந்திரனும் ,கம்பனை காசுக்கு வாங்கிட்டானுகள்...