முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஆசிரியரின் காலுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்து நேற்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.