அரசாங்கத்தின் அடுத்த அதிரடி...வானொலி, தொலைக்காட்சிகளுக்கு அமுலாகவுள்ள புதிய நடைமுறை!

இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 100 ரூபாய் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு தொலைக்காட்சி சேவைகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வானொலிகளில ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 20 ரூபாய் செலுத்துவதற்கு அனைத்து வானொலி சேவைகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடல்களுக்காக வசூலிக்கப்படும் பணம், இசையமைப்பாளர், பாடகர்கள், பாடலாசிரியர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.