தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 பேர் தொடர்பில் வெளியான தகவல்

சீனாவின் வுஹானிலிருந்து இலங்கை வந்தடைந்த 33 பேரும் தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திய பரிசோதனைக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் பின்னர் வெளியான வைத்திய அறிக்கைகளில் அவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்தே அவர்கள் இன்றைய தினம் தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து அக்குரேகொட இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து வெளியேறியுள்ள 33 பேரும் அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அக்குரேகொட இராணுவ முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள குறித்த 33 பேரும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சந்திப் பின்னர் குறித்த 33 பேரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமைசீனாவிலிருந்து இலங்கை வந்த 33 பேரும் குறிப்பிடத்தக்கது.