குவைத்திலிருந்து நாடு திரும்பிய 46 பேர்

வீட்டு எஜமானர்களால் துன்புறுத்தல்களுக்குள்ளான 46 வீட்டுப் பணிப்பெண்கள் குவைத்திலிருந்து இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-230 இன் ஊடாக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலானோரே இவ்வாரு வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டு உரிமையாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீடுகளை விட்டு வெளியேறும்போது, குறித்த பணிப்பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் குவைத் சி.ஐ.டி.அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் மீதமுள்ள 33 பேர் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் உள்ள ‘சூரக்ஷா’ தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது குறித்த 46 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.