மாங்குளத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள்- 20 வருடங்கள் பழமை வாய்ந்தவையாம்!

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றையதினம் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமை வாய்ந்தவை என கூறப்பட்டுள்ளதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் நேற்று முன்தினம் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய மேலதிக அகழ்வு பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கபட்டன.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் இந்த அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள், இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்ட நிலையில், அவை சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமை வாய்ந்தவை என கூறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.