பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பெண்ணின் சடலம்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர் பகுதியில் யாசகம் பெற்று வந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.