மீண்டும் வெங்காய விலையில் திடீர் மாற்றம்!

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் 100 ரூபாவால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்திய நிலையில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

எனினும் மக்கள் அந்த வெங்காயத்தை விரும்பவில்லை.

இதற்கிடையில், கொழும்பு மொத்த வியாபாரிகள் அடுத்த மாதம் இந்தியாவில் இருந்து வெங்காயத்தை மீண்டும் இறக்குமதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மற்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை இந்த வாரத்திற்கு ரூ .100 / - உயர்ந்துள்ளதுடன், தற்போது பெரியவெங்காயம் கிலோ ஒன்றின் சில்லறை விலை 320 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.