எத்தியோப்பியாவிலிருந்து தபாலகத்திற்கு வந்த 20 கிலோ போதைபொருள்!

எத்தியோப்பியாவிலிருந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருள் மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

20 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் பொதி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பொதியை பெற்றுக்கொள்வதற்கு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இலங்கைவந்த போதைப்பொருளை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.