சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்த இரட்டை மகிழ்ச்சி

இதுவரை தரம் B ஆக இருக்கும் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரம் A ஆக தரமுயர்த்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் திரு. மிஹ்லார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.வை.எம். ஹனீபா, முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அசீம், வைத்தியர்கள், முக்கிய பிரமுகர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை சாய்ந்தமருது மக்களுக்கான தனியான புதிய நகரசபையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.