யாழில் இன்று தங்கம் வாங்குவோரிற்கு மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று 2 ஆயிரம் ரூபாயால் குறைவடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளமை காரணமாக கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்வடைந்தது.

55 நாடுகளில் கோரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் செய்யப்படும் முதலீடு குறைந்து, அது தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று 73 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுண் ஆபரணத் தங்கம் இன்று (பெப்.29) (22 கரட்) 71 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல நேற்று 80 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 78 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

loading...