இதுவரை இல்லாத வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இப்படியொருநிலை!

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நாளாந்த விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்கள் ஓடுதளத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

அத்துடன் விமானிகளும் விமானப் பணியாளர்களும் விடுமுறையில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுதளம் இதுவரை இல்லாத ஓர் அமைதிநிலையை அடைந்திருப்பதாக , விமான நிலைய அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

loading...