கிளிநொச்சி தனிமைப்படுத்தல் முகாமுக்கு சென்ற யாத்திரிகள் செய்த முகம்சுழிக்கவைக்கும் செயல்!

விமான நிலையத்தில் வழங்கப்படும் உணவு பொதிகளின் கழிவுகள் கிளிநொச்சி குளத்தின் இருமருங்கிலும் உள்ள வீதிகளில் வீசப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த இந்திய யாத்திரிகர்கள் விமான நிலையத்தின் ஊடாக கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்திலுள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அங்கு வரும்போது குறித்த உணவுக் கழிவுப் பெட்டிகளை இவ்வாறு வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீபவன், குறித்த இடத்திற்குச் சென்று அதனைப் பார்வையிட்டதுடன் அதனை அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

loading...