ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் இடங்கள்

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புத்தளம், கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் ஊரடங்கு செவ்வாய்க்கிழமை வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே தினத்தில் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வரும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

loading...