இன்றுமுதல் கைதுகள் ஆரம்பம் ! அரசாங்கம் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸ் மருத்துவ சோதனைக்கு உட்படாமல் மறைந்திருப்போருக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது மருத்துவமனைகளில் தஞ்சம் புகாமல் இருப்போர் தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் 14 நாட்கள் தொற்று பரிசோதனை முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.