முகக் கவசம் இல்லை!கிளிநொச்சி மக்களை திருப்பி அனுப்பிய படையினர்

ஊரடங்கு உத்தரவு இன்று காலை ஆறு முதல் மதியம் 12 மணி தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தனர்.

வங்கிகள் வியாபார நிலையங்கள் முன் அதிகளவான பொது மக்கள் வரிசையில் இடைவெளிவிட்டு காத்திருந்து தேவைகளை நிறைவேற்றிச் சென்றனர்.

எனினும் முகக்கவசம் இல்லாது வரிசையில் நின்ற பொது மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றது.

அத்துடன் சதொச விற்பனை நிலையம், சந்தை, தனியார் விற்பனை நிலையம் என்பவற்றில் மக்கள் அதிகளவாக காணப்பட்டனர்.

இதேவேளை மீண்டும் இன்று நண்பகல் 12 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக் கிழமை காலை ஆறு மணிவரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

loading...