சித்திரைப் புதுவருடப் பிறப்பை தவிர்க்குமாறு கோரிக்கை!

முழு உலகத்தையும் உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சித்திரைப் புதுவருடப் பிறப்பை வழமைபோல கொண்டாடுவதைத் தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று நடைபெற்ற நேர்காணலின்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

கொரோனா வைரஸ் இலங்கையில் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், புதுவருடப்பிறப்பை கொண்டாடவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

loading...