கொரோனா சந்தேகம் ! ரக்ஷ்ய பிரஜை உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் ரக்ஷ்ய பிரஜை உட்பட ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து ஊடாக இலங்கை வந்த குறித்த ரக்ஷ்யப் பிரஜை மிரிஸ்ஸ பகுதிக்கு சென்ற நிலையில் அங்கிருந்து நேற்று மாலை கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஐவரில் நான்கு பேர் இலங்கையர்கள் என கராப்பிட்டிய மருத்துவமனை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.