சந்தையில் மரக்கறி மூடைகளை ஏற்றி இறக்கிய கலாநிதி ஹர்ஸ டி சில்வா

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா சந்தையொன்றில் மரக்கறி மூடைகளை ஏற்றி இறக்கிய சம்பவம் வைரலாகப் பரவிவருகின்றது.

நாடுமுழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 06 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தளர்த்தப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் எம்.பி ஹர்ஸ டி சில்வா இன்று காலை நாரஹேன்பிட்டிய சந்தைத் தொகுதிக்கு விஜயம் செய்தார்.

அங்கு லொறிகளில் ஏற்றிஇறக்கப்பட்ட மரக்கறி மூடை தொழிலாளர்களுடன் அவர் அளவளாவிய பின் அவர்களுக்கு உதவிசெய்யும் முகமாக மூட்டிகளை தூக்கி உதவியுள்ளார்.

இதேவேளை கலாநிதி ஹர்ஸ டி சில்வா இலங்கையில் இருக்கும் பிரபல பொருளாதார நிபுணர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.