சுவிஸ் போதகர் விவகாரம் ! இன்றும் தனிமைப்படுத்தப்பட்ட 18 பேர்

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து வந்து ஆராதனை நடத்திய போதகருடன் நேரடி தொடர்புகளை வைத்திருந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் குறித்த நபர்கள் இன்று காலை யாழ். காங்கேசன்துறை பகுதியிலுள்ள இராணுவத்தின் தல்செவன தனிமைப்படுத்தும் அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து உமிழ்நீர் மாதிரிகள் சோதனைக்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

loading...