பிரான்ஸிற்கு தப்பிஓடினார் கொரோனா சந்தேக பெண்!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படாமல் தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் பிரான்ஸிற்கு சென்ற தகவல் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிராணி பீரிஸ் என்கிற பெண்ணே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

குறித்த பெண் கடந்த 5ஆம் திகதி இலங்கை வந்து கொரோனா தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.

அதன்பின்னர் அவர் கடந்த 8ஆம் திகதி பிரான்ஸிற்கு சென்றுவிட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெண் பொலிஸாரினால் கொரோனா தொற்று சந்தேக நபர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு தேடப்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.