40 வகையான பிறழ்வுகளை கொண்டுள்ள கொரோனா! ஐஸ்லாந்து விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸின் 40 பிறழ்வுகளைக் கண்டுபிடித்திருப்பதாக அச்சம் தரும் தகவலை ஐஸ்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் ஐஸ்லாந்தில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் வேலைகளில் ஆராய்ச்சியார்கள் பலரும் ஈடுபட்டு வரும் நிலையில், ஐஸ்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் 40 பிறழ்வுகளை கண்டுபிடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐஸ்லாந்திய சுகாதார அதிகாரிகள், மரபியல் நிறுவனமான டிகோட் மரபியல் உடன் இணைந்து, 9,768 பேரை கொரோனா வைரஸுக்காக பரிசோதித்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.