இலங்கையில் கொரோனாவால் பீடிக்கப்பட்டிருந்த மூன்றாமவரும் குணமடைந்தார்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நோயாளியும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இத்தகவலை சுகாதார சேவைகள் மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிகபட்டிருந்த மூன்றாவது நோயாளி ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையில் இதுவரை கோரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட 102 பேரில் மூவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் 99 பேர் 3 வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

loading...