நாளை குறுகிய கால இடைவெளிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு ! கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளரின் விஷேட அறிவித்தல்

தற்போது அமுலில்லுள்ள ஊரடங்குச் சட்டமானது நாளைய தினம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரையான குறுகிய கால இடைவெளிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் வைரஸ் தொற்றினை தடுக்கும் முன்னேற்பாடான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து எமது பகுதிக்கான பொலிஸ், பொதுச் சுகாதார பிரிவு, தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் நடாத்தப்பட்ட விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன.

01.வாழைச்சேனை நகரிலுள்ள மொத்த, சில்லறை மரக்கறிக் கடைகள் யாவும் வாழைச்சேனை பொதுமைதானத்தில் (VC மைதானம்) மாத்திரம் அனுமதித்தல்.

02.வியாபாரிகள், பொதுமக்களை பாதுகாப்பு முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்திருந்தால் மாத்திரம் அனுமதித்தல்.

03. ஒரு குடும்பத்தில் ஒருவரை மாத்திரமே பொருட் கொள்வனவிற்காக அனுமதித்தல்.

04.வாகனங்களை உரிய இடங்களில் மாத்திரம் தரித்துவைத்தல்.

* வியாபாரிகள்-மைதனத்தில் ஒதுக்கப்படும் இடம்.

* பொதுமக்கள்- அடையாளப்படுத்தப்படும் வீதி.

05.வியாபார நடவடிக்கையின் போது சன நெரிசலினை கட்டுப்படுத்துவதற்காக பொலிசாரின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளல்.

06.வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலினை காட்சிப்படுத்தல் கட்டாயமானது.

07.மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருவதற்குள் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

எனவே இதற்கமைய பொதுமக்கள், வர்த்தகர்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதுடன் கொடிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மையும் தம் சமூகத்தினையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

loading...