கொரோனா முகாமிலிருந்து வீடு திரும்பியவர்களின் வாகனம் விபத்து-மூவர் காயம்!

கொரோனா வைரஸ் பரிசோதனை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியவர்களை ஏற்றிச்சென்ற பஸ் நேற்று மாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கந்தக்காடு முகாமிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த இந்த பஸ்ஸிற்குப் பின்னால், பண்டாரகம கொலமெதிரிய பிரதேசத்தில் வைத்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி கட்டுநாயக்க சென்றுகொண்டிருந்த மற்றுதொரு பஸ் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ்ஸிலிருந்த சிப்பாய் ஒருவரும், சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்து. ஹொரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

loading...