கொரோனாவால் மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட போவது உறுதி! மருத்துவர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் போனால் மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட போவது உறுதி என வைத்தியர் மதனழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டதில் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் தாண்டும் போது காலநிலை மாறும் எனக்கூறிய மருத்துவர் . அப்போது பிரச்சினை பெரிதாகும் நிலை தான் காணப்படுகிறதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போது கொரோனாவின் விபரீதம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அத்துடன் இந்த கொரோனாவால் குறைந்த பட்சம் 40 வீதமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எடுத்துக் கொண்டால் ஆறு/ ஐந்து லட்சம் மக்கள் உள்ள மட்டக்கள்ப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பாதிப்பு ஏற்படுமிடத்தில் வைத்தியசாலையில் விடுதி வசதி வேண்டும் எனக்குறிப்பிட்ட அவர்,

இப்பொழுது இருக்கும் நிலையில் மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலை மற்றும் வெளியில் இருக்கும் அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்த்து எடுத்தாலும் இன்னொரு ஆயிரம் கட்டில்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்,

எனவே இந்த நாற்பதாயிரம் பேரில் பதத்தாயிரம் பேருக்கு நாம் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என கூறிய அவர் தற்போதைய நிலவரத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 பேருக்கு தான் அவசர சிகிச்சை பிரிவில் இடம் கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

loading...