இலங்கையில் கொரோனாவினால் கைவிடப்பட்ட வெளிநாட்டு ஜோடி!

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம் தம்பதியினர் கொரோனா வைரஸ் காரணமாக பதுளை எல்ல பிரதேசத்தில் கைவிடப்படட நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது .

கடந்த சில தினங்களாக குறித்த தம்பதி எல்ல பிரதேசத்திலுள்ள கைவிடப்பட்ட நிலமொன்றில் தற்காலிகக் குடிசையை அமைத்து பொழுதுகளைக் கழித்து வருகின்றனர்.

இவர்கள் சுற்றுலாவுக்காக பணம் கொடுத்து நியமிக்கப்பட்ட இலங்கை சுற்றுலா நிறுவனமும் அவர்களை கைவிட்டதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த தம்பதி பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்திற்கு அவர்கள் தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

loading...