யாழ் போதகருடன் நெருங்கிப்பழகிய திருகோணமலை போதகர் குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ். அரியாலையில் சுவிஸில் இருந்து வந்த போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் குடும்பம் ஒன்று திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – உப்புவெளி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த போதகர் நேற்றிரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல்நலத்துடன் இருப்பதாகவும் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

எனினும், அரியாலையிலிருந்து திரும்பியதும் இவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் கூறியுள்ளார்.

loading...