இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டும் இடங்கள்!

இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வடக்கு, மேல் மாகாணங்கள் மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

இதேவேளை, வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி ஊரடங்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.