ஊரடங்கை பயன்படுத்தி பகல் கொள்ளையடித்த கொழும்பு பிரபல நிறுவனம்!அதிகாரிகள் அதிரடி

ஊரடங்கு வேளையில் கொழும்பில் பிரபலமான இணையத்தள சில்லறை விற்பனை நிறுவனமான கப்ரூகா மக்களிடம் அதிகவிலைக்கு பொருகளை விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் நிறுவனம் இணையத்தளம் மூலம் பொருட்களை முன்பதிவு செய்தால், வீட்டுக்கு அவற்றை வழங்குவார்கள்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதை பயன்படுத்தி பொருட்களின் விலையை உயர்த்தி பகல் கொள்ளையடிப்பதாக நுகர்வோர் அதிகாரசபையிடம் பலர் முறையிட்டனர்.

இதனையடுத்து , நேற்று நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குறித்த நிறுவனத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதன்படி மீன் ரின் 550, பெரிய வெங்காயம் 500, பருப்பு ஒரு கிலோ 180 ருபா, மா 150 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அதிக விலை அறவிட்ட வாடிக்கையாளர்களிடம் உடனடியாக பணத்தை மீள கையளிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதுடன், நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.