யாழில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது -ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் நிலவும் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலகம் சுட்டிக்ககாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நாளைக் காலை 6 மணிக்குத் ஊரடங்கு தளர்த்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த அறிவிப்பு மீளப்பெறப்பட்டு ஊரடங்கு உத்தரவு நீடிக்கபட்டுள்ளது.

அந்தவகையில் வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27 காலை 06.00 மணிக்கு நீக்கப்படவிருந்தது.

இதேவேளை தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.