கொழும்பில் கை கழுவுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கொரோனா பரவாமல் இருக்க 30 நிமிடத்துக்கு ஒரு தடவை கைகளை நன்றாக சவர்காரமிட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிவுரை வழங்கியிருந்தது.

இந்நிலையில், கொழும்பில் திடீரென நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

திடீர் தடங்கல் காரணமாக கொழும்பு 1,2,3,5,6,7,8,9,10,11,12 ,13 பகுதிகளில் நீர்வெட்டு இன்றிரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கொழும்பு 4 மற்றும் 14 பகுதிகளில் குறைந்த அமுக்கத்துடன் நீர்விநியோகம் இடம்பெறும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதனால், நீர்தடங்கல் ஏற்படும் பகுதிகளில், நீரை வீண்விரயம் செய்யாமல் பயன்படுத்துமாறும் அச்சபை அறிவுறுத்தியுள்ளது.

loading...