மிருசுவில் படுகொலை! குற்றவாளியை மன்னித்தார் ஜனாதிபதி கோட்டாபய

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை தொடர்பிலான வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இராணுவத்தின் சிறப்பு படையணியைச் சேர்நத சுனில் ரத்னாயக்க, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை என சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த குறித்த சுனில் ரத்னாயக்க , கடந்த 5 வருடங்களாக தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில் வெலிகடை சிறையிலிருந்து இன்று காலை 9.30க்கு சுனில் ரத்னாயக்க, வெளியேறி சென்றுவிட்டதாகவும் , அந்த சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்றவர்) கமல் குணரத்னவும் பிரசன்னமாய் இருந்தார் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

கடந்த 2000ம் ஆண்டு 17ம் திகதி, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்து மலசலக் கூட குழியொன்றுக்குள் புதைத்ததாக இலங்கை இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில், ஐந்து இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

loading...