48 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுள்ள எவரும் இல்லை – சுகாதார அமைச்சர் தகவல்!

நாட்டில் இன்று (மார்ச் 26) மாலை 4.45 மணிவரையான 48 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 102 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.