கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 6 பேர் முழுமையாகச் குண்மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 237 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்று மாலை 4.45 மணிவரையான 48 மணிநேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றுள்ள எவரும் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.