உதயங்க வீரதுங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

மிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது