தமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் ! தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு

தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொடிய கொரோனா வைரஸினை பரவாமல் தடுத்துவிட முடியும் என பௌத்த பிக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இன்று அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவர் கடந்த பல வருடங்களாக தமிழ் மொழியை திறம்பட கற்று தற்போது தமிழ் மொழியிலும் மக்களுக்கு ஆலோசனை கூறிவருகின்றார்.

அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.