கொரோனா சந்தேகம்! இராணுவ கோப்ரல் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில்

புத்தளம் தம்போவ இராணுவ முகாமில் சேவையாற்றி கொண்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவரும், இந்தோனேசியாவில் சுற்றுலா மேற்கொண்டிருந்த ஒருவருக்கும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இதையடுத்து அவ்விருவரும் புத்தளம் வைத்தியசாலையிலிருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இருவரின் உடல்களிலும் சந்தேகத்துக்கிடமான மாற்றங்கள் தென்பட்டன.

இந்த நிலையில் குறித்த இருவரும் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றிவிட்டதாக புத்தளம் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.