யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து சிக்கிய பாவனைக்குதவாத உணவுகள்!

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகள் சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டன.

இன்றைய தினம் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்த சோதனையின் போதே குறித்த உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

எனினும் ஸ்ரான்லி வீதியில் உள்ள குறித்த உணவகத்தின் பின்கதவு திறந்திருந்த நிலையில்அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குறித்த உண்வுகளை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட உணவுகள் உடனடியாக அழிக்கப்பட்ட தோடு, உணவகத்தின் உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.