4000 கைதிகள் விடுதலை ! ஓரிரு தினங்களில் முடிவு

சிறையில் உள்ள 4000 கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சிறுகுற்றங்களை செய்தவர்களையும், பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அக்குழுவினர் பலமுறை ஆராய்ந்து சிறையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியிடம் சிபாரிசு செய்யவுள்ளனர்.

இதனடிப்படையில் சுமார் 4000 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளவர்களில் 2000 பேர் ஒருவருடத்திற்குக் குறைவான சிறைத்தண்டனையை அனுபவிக்கும் சிறுகுற்றங்களைப் புரிந்தவர்கள் என்றும், ஏனைய 2000 பேர் பிணை நிபந்தனையைப் பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதேவேளை தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியினாலும் கைதிகளை விடுதலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சிறைச்சாலை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.