தியத்தலாவ முகாமிலிருந்த இருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி!

பதுளை – தியத்தலாவ முகாமிலிருந்த இருவர் கொரோனா சந்தேகத்தில் பதுளை மருத்துவமனையில் இன்று பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 21 இளைஞர் மற்றும் 12 வயது மாணவன் ஆகிய இருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியதை அடுத்து தியத்தலாவ முகாமுக்கு மருத்துவப் பரிசோதனைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்படுவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து அவட்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.