உடுவில் சமுர்த்தி அலுவலக ஊழியரும் கொரோனா சிகிச்சை பிரிவில் !

யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.