ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் களியாட்டம்! 12 பேர் கைது

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாதுவ, மொரன்துடுவ பகுதியில் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்ட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.