கண்டியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா சந்தேக நபர்! ஐ.டி.எச் இற்கு மாற்றம்

கண்டி மாவட்டத்தின் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்று சந்தேக நபர் கண்டி மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

அக்குறணை, தெலும்புகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் பாதனி வியாபாரியான குறித்த நபர் கடந்த 12ம் திகதி இந்தியா சென்று 15ம் திகதி நாடு திரும்பியிருக்கின்றார்.

அதனை அதொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி ஏற்பட்ட நிலையில் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டார்.

இதேவேளை, அவரது இல்லத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.